(Google による翻訳)タユマナヴァル ティルコイルは、サンバンダルとアッパー アディに捧げられた寺院です。 主が母親として女性のもとに来られ、出産の際に助けられたというのは迷信(アイティガム)です。チョラ・ナドゥは、デヴァラブの賛美歌が贈られた場所の中で、サフラン川の南岸に位置する6番目のシヴァスタラです。
すべての生き物の父である主は、出産の際に母親として女性を助けに来られたため、タユマナヴァル(母)として知られています。この町ではトリシラン(三つ頭の怪物)がシヴァ神を崇拝していたため、「トリシランパリ」という名前はその悪魔の名前に由来しています。しかし時間が経つにつれて、それは人々の言葉としてティルチラーパッリになりました。
チョーラ王がヴァラユールを首都としてこの地域にやって来ました。当時、シヴァ神の帰依者である賢者サラマは、この寺院にナンダヴァンを建て、毎日シヴァ神に花を捧げて崇拝していました。かつて商人が賢者の庭から花を盗んで王に贈りました。アマラールに恋をしていた王は、商人に毎日花を持ってくるように頼みました。それで彼はナンダヴァーナで盗みを続けました。このため、セージ・サラマのシヴァ・プージャは中断された。彼は王に告げましたが、王は気づきませんでした。
取り乱した賢者はシヴァ神に訴えました。彼のためにシヴァは振り向いて王の宮殿の方向を睨みつけた。その結果、その地域に泥が降りました。自分の間違いに気づいた王は、シヴァ神に許しを祈りました。このようにして、このタラートの主は悪を行う者たちを祝福します。彼はセヴァンティの花の創造者として崇拝されているため、「セヴァンティ ナダール」としても知られています。
タナクタンという名前の商人がこの町に住んでいました。妊娠中の妻は母親に助けを求めた。母も家に向かいました。途中でカーヴリー川が氾濫したため、彼女は家に帰ることができなかった。その間、彼女は陣痛を始めた。ラトナヴァティはトリシラナータに彼女を守ってくれるように祈りました。そしてシヴァは母親の姿をとって出産しました。
カーヴリー川は一週間洪水に見舞われましたが、それまでシヴァは娘に対する母親の義務を果たしました。洪水が治まった後、ラトナヴァティさんの母親は帰宅した。二人とも彼女の姿をした別の人を見つけてショックを受けました。それからシヴァは彼ら自身の姿で二人の前に現れました。母親としての気品から「マザー」というあだ名がついた。
営業時間は、午前 6 時から午後 12 時 30 分までと午後 4 時 30 分から午後 9 時までです。
ガネーシャ神が根元にルビーを飾ります。中央ではマザーが、頂上ではピライヤールが優雅さを与えます。トリッキーの美しさを上からお楽しみください。
(原文)
தாயுமானவர் திருக்கோயில் சம்பந்தர் மற்றும் அப்பர் அடிகளால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவி தென் கரையில் அமைந்துள்ள ஆறாவது சிவஸ்தலமாகும்.
எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார். திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) இவ்வூரில் சிவபெருமானை வழிபட்ட இடம் ஆதலால் அந்த அரக்கன் பெயரிலே 'திரிசிரன்பள்ளி' என்று பெயர் ஏற்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மக்களின் பேச்சு வழக்கத்தில் திருச்சிராப்பள்ளி ஆக மாறியது.
உறையூரைத் தலைநகராக கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.
வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப் பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.
தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வர முடிய வில்லை. இதனிடையே, அவளுக்குப் பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.
காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.
காலை 6 மணி முதல் 12.30 வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் அருள் பாலிக்கிறார். மத்தியில் தாயுமானவரும் உச்சியில் பிள்ளையார் அருள் பாலிக்கிறார். திருச்சி அழகை உச்சியிலிருந்து கண்டு களிக்கலாம்.